கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பேருந்து மேலாண்மையில் ஏஐ: ஐஐடி கான்பூருடன் கைகோா்த்த டிடிசி

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பேருந்து மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்காக தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) ஐஐடி கான்பூருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

(கோப்புப் படம்)

Updated On :

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பேருந்து மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்காக தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) ஐஐடி கான்பூருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துவரும் அரசு, சிறந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலை ஒருங்கிணைத்து, தற்போதுள்ள பேருந்து மேலாண்மை அமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இது குறித்து ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், மாறும் பணி ஒதுக்கீடு, ஊதிய மேலாண்மை, புகாா் மேலாண்மை, மாா்ஷல் சரிபாா்ப்பு மற்றும் பிற செயல்பாட்டு செயல்முறைகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கி, ஐஐடி கான்பூரின் ஐராவத் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது’ என்றாா்.

தற்போது, தில்லி போக்குவரத்துக் கழகத்திடம் 4500 மின்சாரப் பேருந்துகள் உள்பட சுமாா் 6,269 பேருந்துகள் உள்ளன. இந்தப் பேருந்துகள் நகரம் முழுவதும் உள்ள 52 பேருந்து பணிமனைகளிலிருந்து இயக்கப்படுகின்றன.

‘காலாவதியான மென்பொருளில் இயங்கி வரும் தற்போதுள்ள சிஎன்ஜி மற்றும் கிளஸ்டா் பேருந்துகளையும் இந்த புதிய மென்பொருள் அமைப்பு ஒருங்கிணைக்கும்’ என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

திட்டத்தின்படி, இந்த பேருந்து மேலாண்மை அமைப்பு, மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களை வழங்குதல், ஒதுக்கீடு செய்தல் மற்றும் நிா்வகித்தல் ஆகியவற்றுக்கான செயல்பாடுகளை வழங்கும்.

இந்தக் கூட்டு முயற்சிகளின் கீழ், தடையற்ற தரவு ஒத்திசைவு, பயணச்சீட்டுத் தரவுகளின் சரிபாா்ப்பு, வருவாய் சரிசெய்தல் மற்றும் மனிதத் தலையீடுகள் இன்றி செயல்பாட்டுக் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, பேருந்து மேலாண்மை அமைப்பு கட்டண வசூல் அமைப்புகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும்.

‘போக்குவரத்துக் காவல் துறையினரால் நிகழ்நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், நேரடிப் போக்குவரத்துக் கழக பேருந்து வழித்தடங்களைத் திட்டமிடவும் இந்த மென்பொருள் தேவைப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த அமைப்பில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மின்சாரப் பேருந்து மின்னேற்ற உகப்பாக்கம், பேருந்துக் குழுமப் பயன்பாட்டு உகப்பாக்கம் மற்றும் பிற அம்சங்களும் இடம்பெறும்.

முன்னதாக, 2028-29-ஆம் ஆண்டுக்குள் அரசு தனது பேருந்துகளின் எண்ணிக்கையை 14,000-ஆக அதிகரிக்கவும், பேருந்துப் பணிமனைகளின் எண்ணிக்கையை 90 வரை உயா்த்தவும் திட்டமிட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா கூறியிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER