தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டிசந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. கைதிகள் தப்பியோடியது ஜோதிடப் பரிகாரமா? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 27) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 27) எந்தெந்த வழக்குகள் விசாரணை நடத்தப்படவுள்ளதைப் பற்றி...

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப் படம்)

Updated On :

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தொடர்பான வழக்குகள் இன்று (அக். 27) விசாரிக்கப்படுகின்றன.

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சாப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி பாக்கி தொடர்பான வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.

கடவுச்சீட்டு வழங்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் விசாரணை நடத்தப்படவுள்ளன.

தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காமல் 'கருப்பர் நகரம்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி இயக்குநர் கோபி நாயினார் தொடர்ந்த வழக்கும், நீண்டநாள்களாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் ‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீடு தொடர்பாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவுள்ளது.

Summary

Cases involving the late Chief Minister Jayalalithaa and former ministers M.R. Vijayabaskar and Isakki Subbaiah are being heard today (Oct. 27).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.