சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 15) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 15 ) எந்தெந்த வழக்குகள் விசாரணை? வருகின்றன என்பதைப் பற்றி...

சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப் படம்)
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 15) விசாரணை நடத்தப்படவுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி ரூ.100 மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்பிணை கோரிய மனு விசாரிக்கப்படுகிறது.
மயிலாடுதுறை அருகே அரிசி ஆலையை அகற்ற கோரி சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு இன்று விசாரணை நடத்தப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கு விசாரிக்கப்படவிருக்கிறது.
வீரமணி பாலியல் வன்கொடுமை விடியோக்களை வெளியிட தடை கோரிய வழக்கும், அதே விவகாரத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச் செயலர் கண்ணையா மகன் பிரகாஷ் முன்பிணை கோரிய வழக்கும் இன்று தனித்தனியே விசாரிக்கப்படுகின்றன.
தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன் எ.வ.குமரன் தாக்கல் செய்த வழக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.
Summary
Cases concerning matters such as the recognition of private schools are set to be heard in the Madras High Court today (Oct. 15).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

