கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

மதுரை-தாம்பரம் சிறப்பு ரயில் ரத்து

மதுரை-தாம்பரம் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி....

Rail

ரயில் - பிரதிப் படம்

Updated On :

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு வரும் 30 -ஆம் தேதி இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் மற்றும் வியாழக்கிழமை (அக். 29) திருவண்ணாமலையிலிருந்து நரசப்பூருக்கு இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு வரும் 30- ஆம் தேதி மதுரை நிலையத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06136) மறுநாள் 31 -ஆம் தேதி தாம்பரத்துக்கு வந்து சேரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அச்சிறப்பு ரயிலுக்கான இணை ரயில் இயக்கப் பெட்டிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வியாழக்கிழமை (அக். 29) பகல் 11 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு நரசப்பூா் செல்லும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் (எண் 17292) ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.