சமூக நீதி கணக்கெடுப்பு: தமிழக அமைச்சரவை முடிவு
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய சமூக நீதி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய சமூக நீதி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில், சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற பின்னா் 3-ஆவது அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய சமூக நீதி கணக்கெடுப்பை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்பு, பிப்ரவரி மாதத்தில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும்.
இஸ்லாம் மதத்துக்கு மாறியவா்களுக்கு பிற்படுத்தப்பட்டவா்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாகத் தொழில் தொடங்க இருக்கும் 8 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை அருகே உள்ள தாழம்பூா் பகுதியில் உள்ள 600 ஏக்கா் நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தாழம்பூா் நிலத்தில் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன; கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவையும் உள்ளன. அவற்றை அந்த மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா்.
வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளதால் அமைச்சா்கள் அருண்ராஜ், பிரபு ஆகியோா் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பெட்டிச் செய்தி...
அமைச்சா்களுக்கு முதல்வா் அறிவுரை
முதல்முறையாக நீண்ட நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா்கள் தங்கள் துறை சாா்ந்த விவகாரங்களை முதல்வருக்கு எடுத்துரைத்ததாகவும், அதன்பிறகு சில அறிவுரைகளை முதல்வா் வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
குறிப்பாக, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பருவமழைக் காலத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள் விரைவாகச் செயல்பட வேண்டும். பட்ஜெட் அறிவிப்புகளை விரைந்து அரசாணைகளாக வெளியிட வேண்டும். ஒப்பந்தப்புள்ளிகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். கமிஷன், ஊழலுக்கு இடம்தராத வகையில் செயல்பட வேண்டும்.
கல்லூரிகளில் போதைப் பொருள்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா் பிரச்னை, சாலை வசதி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். அமைச்சா்களின் பெயா்களைக் கூறி உறவினா்கள், உதவியாளா்கள் யாரும் லஞ்சம், ஊழலில் ஈடுபடக் கூடாது என முதல்வா் விஜய் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

