
செப்டம்பரில் எத்தனை விடுமுறை? வார இறுதி நாள்களுடன் சேர்ந்து வருகிறதா?
செப்டம்பரில் எத்தனை நாள்கள் விடுமுறை வருகின்றன, வார இறுதி நாள்களுடன் சேர்ந்து வருகிறதா என்பது பற்றி..

விநாயகர் சதுர்த்தி - ENS
இந்த 2026ஆம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியது போல இருக்கிறது. ஆனால், ஒன்பதாம் மாதமான செப்டம்பரே வந்துவிட்டது என்று நினைப்பவர்கள் பலர்.
இந்த செப்டம்பர் மாதம் பொதுவாக ரம்மியமான காலநிலை தொடங்கும் மாதமாக இருக்கும். இப்போது புவி வெப்பமயமாதல் காரணமாக, வருடம் முழுக்க கோடைக்காலமாக இருப்பதால், பலரும் ஊட்டி, கொடைக்கானல் என செல்வதற்கு நல்ல நாளைத் தேடிக் கொண்டிருக்கலாம்.
செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில் பொதுவாக இரண்டு விடுமுறை நாள்கள் வருகின்றன. ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. செப். 4ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வெள்ளிக்கிழமை வருகிறது. ஆனால் அதற்கடுத்த சனிக்கிழமை வேலை நாள் என்றாலும் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் ஊர் சுற்ற சரியாக இருக்கும்.
அடுத்து செப். 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. இது பத்து பொருத்தமும் பக்காவாக அமையப் பெற்ற நாளாக உள்ளது. காரணம், இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி வரும் திங்களன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் வெளியூர் பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.
இது தவிர, சில மாநிலங்களுக்கு என தனிச்சிறப்பு மிக்க நாள்களும் அந்தந்த மாநிலங்களுக்கு விடுமுறை இருப்பதால் அவற்றையும் கணக்கிட்டு பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





