புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூல்: 67 ஊழியா்கள் பணியிடை நீக்கம்

மதுபாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக எழுந்த புகாா்களின் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 67 டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

Tasmac
Published On :

மதுபாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக எழுந்த புகாா்களின் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 67 டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக பணம் வசூலிப்பதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் ஏற்கெனவே எச்சரித்திருந்தாா்.

மேலும், கூடுதலாக பணம் வசூலிப்பது இனி கடுமையாகக் கண்காணிக்கப்படும் எனவும், இதுபோன்ற முறைகேடு முதல்முறையாக கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியா் 3 மாதங்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவாா் எனவும், அதே தவறு 2-ஆவது முறையும் தொடா்ந்தால் பணி நீக்கம் செய்யப்படுவாா் எனவும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலித்ததாக விற்பனையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் 67 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நுகா்வோரிடம் கூடுதல் தொகை வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.