தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்.2) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்.2) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 9:44 am IST

புதுதில்லி: ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கான நலத்திட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கு, ஒடிசாவில் டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(செப்.2) தில்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை(செப்டம்பர் 2) விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:

* கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான தாரா சிங்கின் தண்டனைக் குறைப்பு வழக்கு

* சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பினருக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் தாக்கல் செய்துள்ள வழக்கு.

* ஒடிசாவில் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமனம் தொடர்பான வழக்கு

* 'நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர்ப்பாயங்களின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பதில் அரசுகள் நடவடிக்கை எடுக்காமை மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை' தொடர்பான உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு

* நாடு முழுவதும் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கான நலத்திட்ட நடவடிக்கைகள் தொடர்பான 'அகில இந்திய நீதிபதிகள் சங்கத்தின்' வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Summary

Which cases are being heard at the Supreme Court in Delhi today (Sept. 2)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.