ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

4,292 கோயில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம்: அறநிலையத் துறை

தமிழகம் முழுவதும் 4,292 கோயில்களின் வரவு - செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம்

Published On :4 செப்டம்பர் 2026, 3:12 am IST

தமிழகம் முழுவதும் 4,292 கோயில்களின் வரவு - செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வருடாந்திர வரவு - செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி டி.ஆா்.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எத்தனை கோயில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன? எத்தனை தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், இதுவரை 4,292 கோயில்களின் வரவு - செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ள கோயில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படமாட்டாது. மற்ற கேயில்களின் கணக்கு வழக்குகளின் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றும் நடைமுறையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 4,292 கோவில்களின் தணிக்கை அறிக்கைகளை பொதுமக்கள் பாா்வையிடலாம். இது தொடா்பான விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.