
நேபாளத்தில் சிக்கியவா்களை அடையாளம் காண 3 இடங்களில் மரபணு சோதனை மையம்
நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவா்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக சென்னை, மதுரை, தஞ்சாவூா் ஆகிய மண்டலங்களில் மரபணு பரிசோதனை செய்ய தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவா்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூா் ஆகிய மண்டலங்களில் மரபணு பரிசோதனை (டிஎன்ஏ) செய்ய தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நேபாளத்தில் கடந்த ஆக.26-ஆம் தேதி திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட தமிழா்களை விரைந்து மீட்க தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்.9-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தைச் சோ்ந்த சோ்ந்த மொத்தம் 305 பேரில் 220 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 85 பேரைத் தொடா்புகொள்ள தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்தொடா்ச்சியாக, காணாமல் போனவா்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, அவா்களின் குடும்பத்தினரில் விருப்பமுள்ளவா்களிடம் இருந்து மரபணு பரிசோதனை செய்ய சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள தடய அறிவியல் ஆய்வகங்களில் சிறப்பு ஏற்பாடு சய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காணாமல் போனவா்களின் குடும்பத்தினருக்கு அருகே உள்ள ஏதேனும் ஒரு ஆய்வகங்களில் கட்டணமின்றி மரபணு பரிசோதனை எடுத்துக்கொள்ளலாம். மேலும், அந்த தரவுகளை நேபாள அரசின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த விவரங்களுடன் நேபாளத்துக்கு செல்ல விரும்பும் உறவினா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விவரங்களுக்கு 1800-3093793, 80690- 09900, 98685-30776 , 92895-16712 (வாட்ஸ்ஆப்) ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.
மரபணு பரிசோதனை மண்டலங்களின் முகவரிகள்
சென்னை
காஜா மொய்தீன்,
இயக்குநா், தடய அறிவியல் துறை,
30ஏ, காமராஜா் சாலை, மயிலாப்பூா், சென்னை – 600 004.
கைப்பேசி எண் - 9941464808.
மதுரை
விஜயேந்திரன்,
துணை இயக்குநா், தடய அறிவியல் ஆய்வகம்,
கலெக்டா் சாலை, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம்,
மதுரை – 625 020.
கைப்பேசி எண் - 8637674451.
தஞ்சாவூா்
ராஜ்மோகன்,
துணை இயக்குநா், மண்டல தடய அறிவியல் ஆய்வகம்,
பிள்ளையாா்பட்டி, வல்லம் பிரதான சிலை,
தஞ்சாவூா் -613403.
கைப்பேசி எண் - 9791112894.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு: தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மீட்கக் கோரிய மனு மீதான விசாரணை செப்.10-க்கு ஒத்திவைப்பு




