
நியாய விலைக் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம்! ஆனாலும் கண்ணீரில் நடுத்தர குடும்பங்கள்!! ஏன்?
நியாய விலைக் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனையானாலும் கண்ணீரில் நடுத்தர குடும்பங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் மக்களுக்கு வெங்காயம் ஒரு கிலோ ரூ.35-க்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன். - டிஎன்எஸ்
தமிழ்நாட்டில், வெங்காய வரத்து குறைந்ததால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.65 வரை விற்பனையாகி, தற்போது ரூ.60 ஆகக் குறைந்துள்ளது. சாம்பார் முதல் பருப்பு வரை அனைத்துக்கும் வெங்காயம் தேவை என்ற நிலையில், அதனை தவிர்க்கவும் முடியாமல், தேவையான அளவுக்கு வாங்கவும் முடியாமல் தவிக்கின்றன நடுத்தர குடும்பங்கள்.
இந்த நிலையில்தான், 1000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்திருக்கும் தமிழக அரசு, தமிழ்நாட்டில் உள்ள 8,739 நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளது.
காய்கறிகள் விளையும் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் ஆனாலும் நடுத்தர மக்களின் கண்ணீரைத் துடைக்க முடியவில்லை. காரணம் பல்வேறு காரணங்களால் பல காய்கறிகளின் விலைகள் விண்ணை முட்டுகின்றன.
பீன்ஸ், கேரட் விலை ஒரு கிலோ ரூ.60 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.70 - ரூ.80 வரை விற்பனையாகிறது. அவரைக்காய் விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. பீட்ரூட் ரூ.35 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.40 ஆகவும், தக்காளி ரூ.25லிருந்து ரூ.30 ஆக உயர்ந்திருக்கின்றன.
பல காய்கறிகளின் விலைகள் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்திருப்பதால் பொதுவாக ஒரு நாளைக்கு வாங்கும் காய்கறிகளின் விலைகளில் இது கிட்டத்தட்ட ரூ.25 முதல் 35 வரை உயர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு வாரத்துக்கான வீட்டுச் செலவை அதிகரித்து அன்றாடக் கூலித் தொழிலாளர்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்துகிறது.
நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டாலும் அது சிறு குடும்பங்களுக்கு வேண்டுமானால் பயன்படும். ஆனால் பெரிய குடும்பங்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே போதுமானது. ஆனால், நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனைக்கு வருவதால், வெளிச் சந்தைகளில் அதிகரிக்க வேண்டிய வெங்காய விலை சற்று குறைந்திருக்கிறது. இது ஒன்று மட்டுமே மக்களுக்கு ஆனந்தக் கண்ணீரை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






