பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

நியாய விலை கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் மக்களுக்கு வெங்காயம் ஒரு கிலோ ரூ.35-க்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தது குறித்து...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் மக்களுக்கு வெங்காயம் ஒரு கிலோ ரூ.35-க்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன். - டிஎன்எஸ்

Published On :3 செப்டம்பர் 2026, 12:11 pm IST

ராணிப்பேட்டை: வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு வழங்கும் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரூ.55 முதல் ரூ.60 வரை தரத்திற்கு ஏற்ப வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விலையானது அதிகரிக்கக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் மலிவு விலையில் வெங்காயம் வாங்கி பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் வெங்காயம் ரூ. ரூ.35-க்கு மக்களுக்கு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், நகர்ப்புறங்களில் உள்ள 8,739 நியாய விலை கடைகள் மூலம் வியாழக்கிழமை (செப் 3) முதல் கிலோ ரூ. 35-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படும். தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் அரசு 1,000 டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்துள்ளது.

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சுமார் 20 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்ப்பட்டு இன்று முதல் இரண்டு நாள்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலை கடைகளிலும் மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர் ஒரு அட்டைக்கு தலா ஒரு கிலோ வீதம் வெங்காயம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை அடுத்த பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையில் வெங்காய விற்பனையை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் மக்களுக்கு வெங்காயம் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நுகர்பொருள் அலுவலர் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, மோசமான வானிலை மற்றும் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வரத்து குறைவு ஆகியவற்றின் காரணமாக, சந்தைகளில் தற்போது வெங்காயம் கிலோ ரூ. 56 முதல் ரூ. 60 வரை விற்பனையாகி வருகிறது.

Summary

Onions sell at Rs.35 in ration shops: Ranipet District Collector inaugurates!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.