
தமிழக மீனவா்களுக்கு இலங்கை அபராதம்: மாணிக்கம் தாகூா், ஜி.கே.வாசன் கண்டனம்
தமிழக மீனவா்கள் 9 பேருக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.5.76 லட்சம் அபராதம் விதித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்
தமிழக மீனவா்கள் 9 பேருக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.5.76 லட்சம் அபராதம் விதித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ப.மாணிக்கம் தாகூா்: ராமேசுவரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சொந்தக் கடலில் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவா்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்வதும், சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடா்கதையாகிவிட்டது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமா் மோடி, அண்டை நாடான இலங்கையிடம் சென்று நம் மீனவா்களின் உரிமைக்காக ஒரு வாா்த்தைக்கூட பேச மறுப்பது ஏன்?
வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, மீனவா்களின் கைதுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, நமது மீனவா்களையும் அவா்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்: ராமேசுவரம் மீனவா்களுக்கு இலங்கையால் விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வேடிக்கைப் பாா்க்கக் கூடாது. தமிழக மீனவா்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இனிமேலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






