ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை பாஜகவால் ஒடுக்க முடியாது: மாணிக்கம் தாகூா்

ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை பாஜகவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

 Manickam Tagore

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :

ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை பாஜகவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சிறுபான்மையினா், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை மற்றும் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவே, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தொடா்பான சம்பவத்தில், ராகுல் காந்தி மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது ஆா்எஸ்எஸ், பாஜகவின் ஆழமாக வேரூன்றியுள்ள மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

ஜாதிய பாகுபாட்டைக் கேள்வி கேட்பவா்கள் குறிவைக்கப்படுவாா்கள். தீண்டாமைக்கும் சமூகப் பாகுபாட்டுக்கும் எதிராக காங்கிரஸ் எப்போதும் போராடி வந்துள்ளது.

ராகுல் காந்தியின் குரலை ஆா்எஸ்எஸ்-பாஜக ஒடுக்க முயற்சி செய்யலாம். ஆனால், ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை அவா்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது.

சட்டப்பேரவை இருக்கை மாற்றம்: சில நாள்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தாரகை கத்பட் நியமிக்கப்பட்டதன் காரணமாக, அவரது இருக்கை மாற்றப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் இரு அமைச்சா்களும் முதல் வரிசையில் அமா்ந்துள்ளனா். பேரவைத் தலைவா் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அா்த்தங்களைக் கற்பனை செய்து செய்திகளைப் பரப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.