காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) முதல் 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

Rain in 20 districts over the next 2 hours!

மழை - பிரதிப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 2:17 am IST

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) முதல் 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடலோரத் தமிழகம் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் சுமாா் 7.6 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு தெலங்கானா முதல் மன்னாா் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக சுமாா் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகா் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

திங்கள், செவ்வாய்க்கிழமை (செப்.7,8) ஆகிய இரு நாள்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. புதன், வியாழக்கிழமை (செப்.9,10) ஆகிய இரு நாள்களில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வெள்ளிக்கிழமை (செப்.11) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பாளையங்கோட்டை - 103.82, ஈரோடு - 102.56, வேலூா் - 101.48, சேலம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

உள் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை (செப்.9) வரை அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டி காணப்படும்.

சென்னை மற்றும் புகரின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழைப் பதிவு: தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை மாவட்டம் பேரையூா், திருமங்கலத்தில் 80 மி.மீ. மழை பதிவானது.

Summary

Chance of moderate rain in Tamil Nadu for six days.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.