
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல்
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி உள்ளூர் விடுமுறை அளிப்பது பற்றி அமைச்சர் அளித்த தகவல்.....

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் சி.டி.ஆர். நிர்மல்குமார்.
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் குடமுழுக்கிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்கள் அனுமதி உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் நிர்மல் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் இந்து அறநிலை துறை ஆணையர் வினய் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார் :- மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
குடமுழுக்கைமுன்னிட்டு இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். குடமுழுக்கையொட்டி கோயிலில் நடைபெற்ற அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. குடமுழுக்கிற்காக செய்ய வேண்டிய பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. குடமுழுக்கைமுன்னிட்டு 58 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. குடமுழுக்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்றார்.
Summary
Minister C.T.R. Nirmal Kumar stated that an announcement regarding a local holiday for the Meenakshi Amman Temple consecration will be made soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





