சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,055 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்
சட்டப் பேரவை நடவடிக்கைகளைக் காண கடந்த 28 நாள்களில் 32,055 பேர் வருகைப் புரிந்துள்ளது குறித்து...

சட்டப்பேரவை - கோப்புப் படம்
சட்டப்பேரவையை செயல்பாட்டைக் காண கடந்த 28 நாள்களில் 32,055 பேர் வருகைப் புரிந்துள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (செப். 8) தெரிவித்தார்.
முந்தைய ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கு சுமார் 20,000 பேர் மட்டுமே சட்டப்பேரவையை நேரில் பார்க்க வந்த நிலையில், இந்த முறை பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் குறிப்பிட்டார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 28 நாட்களாக, மொத்த அலுவல் 170 மணி நேரம் நடைபெற்றது.
சட்டப்பேரவை நிறைவு நாளான இன்று, உரிமைக்குழு, மனுக்கள் குழு, விதிகள் குழு என்பன உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. பட்ஜெட் மீதான விவாதங்கள், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், அமைச்சர்கள் பதிலுரைகள் இக்கூட்டத்தொடரில் நடைபெற்றன.
இதனிடையே 28 நாள்கள் நடைபெற்ற இந்தத் தொடரின் செயல்பாட்டைக் காண 32,055 பேர் வருகைப் புரிந்துள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
முன்பு ஆண்டுக்கு சராசரியாக 20 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்ததாகவும், இம்முறை, 75 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வமாக வந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
முந்தைய ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கு சுமார் 20,000 பேர் மட்டுமே சட்டப்பேரவையை நேரில் பார்க்க வந்த நிலையில், இந்த முறை பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாககவும் சட்டப்பேரவைத் தலைவர் குறிப்பிட்டார்.
ஆண்டு வாரியாக பார்வையாளர்கள் (28 நாள்கள் மட்டும்)
2021 ஆண்டு - 22,651 பேர்
2023 ஆண்டு - 20,137 பேர்
2024 ஆண்டு - 10,754 பேர்
2025 ஆண்டு - 20,123 பேர்
2026 ஆண்டு - 32,055 பேர்
Summary
32,555 people visited the Legislative Assembly in 28 days! J.C.D. Prabhakar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





