இடைத்தேர்தல்: அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிப்பு...

எடப்பாடி பழனிசாமி - IANS
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இத்துடன் முதல்வர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார். இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.
இவற்றில் 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மற்றும் வருகிற அக். 6 இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் செப். 10 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம், செப். 10 மாலை 6 மணிக்குள் மனுவை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இரு தொகுதிகளுக்கு நாளை (செப். 9) வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல் விவரம்....
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - செப். 9
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப். 16
வேட்புமனு மீதான பரிசீலனை - செப். 17
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் - செப். 19
வாக்குப்பதிவு நாள் - அக். 6
வாக்கு எண்ணிக்கை - அக். 9

Summary
By-election: AIADMK begins distribution of application forms today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







