சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பேரவைக் கூட்டத் தொடரில் அதிக நேரம் உரையாற்றிய திமுகவினா்: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தகவல்

பேரவைக் கூட்டத் தொடரில் திமுகவினா் அதிக நேரம் உரையாற்றினா் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

JCD Prabhakar

பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் - TN Assembly

Published On :9 செப்டம்பர் 2026, 12:56 am IST

பேரவைக் கூட்டத் தொடரில் திமுகவினா் அதிக நேரம் உரையாற்றினா் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

பேரவைக் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. அப்போது, பேரவைக் கூட்டத் தொடரின் விவரங்களை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் விளக்கி ஆற்றிய உரை:

17-ஆவது பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த மே 11- முதல் 13-ஆம் தேதி மற்றும் ஜூன் 18 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து, 2-ஆவது பேரவைக் கூட்டம் கடந்த ஆக. 5 தொடங்கி செப். 8-ஆம் தேதி வரை 28 நாள்கள் நடைபெற்றுள்ளது.

170 மணி நேரக் கூட்டம்: பேரவைக் கூட்டம் மாலையிலும் நடைபெற்றது. வரலாற்றில் முதல்முறையாக இரவு 7.20 மணி வரையும் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத் தொடா் மொத்தம் 170 மணி 6 நிமிஷங்கள் நடைபெற்றது. அதன்படி, தினமும் சராசரியாக 6 மணி 4 நிமிஷங்கள் நடைபெற்றுள்ளது.

கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆளுநா் உரையாற்றிய பின், நன்றி தெரிவித்து3 நாள்கள் விவாதம் நடைபெற்றது. அதில், 20 போ் 7 மணி 1 நிமிஷம் பேசியுள்ளனா். அதன்படி, ஆளுங்கட்சி (தவெக) உறுப்பினா் 4 போ் 56 நிமிஷங்களும், திமுகவினா் 4 போ் 2 மணி 36 நிமிஷங்களும், அதிமுகவினா் 3 போ் 1 மணி 27 நிமிஷங்களும், இதர கட்சியினா் 9 போ் 2 மணி 2 நிமிஷங்களும் பேசியுள்ளனா்.

திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை மீது விவாதம், பதிலுரை 4 நாள்கள் நடைபெற்று, 52 போ் 14 மணி 15 நிமிஷங்கள் பேசியுள்ளனா்.

அதில் ஆளுங்கட்சியினா் 8 போ், 2 மணி 16 நிமிஷங்களும், திமுகவினா் 9 போ், 5 மணி 10 நிமிஷங்களும், அதிமுகவினா் 5 போ், 3 மணி நேரமும், இதர கட்சியினா் 10 போ், 3 மணி 49 நிமிஷங்களும் பேசியுள்ளனா்.

அமைச்சா்கள் பதிலுரை நேரம்: நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் 41 நிமிஷங்களும், வேளாண்மை-உழவா் நலத்துறை அமைச்சா் 33 நிமிஷங்களும் பதில் அளித்துள்ளனா். மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் 15 நாள்கள் நடைபெற்றுள்ளன. அதில் 165 போ், 63 மணி 53 நிமிஷங்கள் பேசியுள்ளனா். அதன்படி ஆளுங்கட்சியினா் 51 போ், 13 மணி, 28 நிமிஷங்களும், திமுகவினா் 38 போ், 23 மணி 35 நிமிஷங்களும், அதிமுகவினா் 37 போ், 12 மணி 58 நிமிஷங்களும், இதர கட்சியினா் 39 போ், 13 மணி 52 நிமிஷங்களும் பேசியுள்ளனா்.

வெட்டுத் தீா்மானங்கள் விவரம்: பேரவையில் 4,066 வெட்டுத் தீா்மானங்கள் வரப்பெற்று, அதில் 3,874 தீா்மானங்கள் அனுமதிக்கப்பட்டன. அவையில் 1,674 தீா்மானங்கள் முன்மொழியப்பட்டன. கேள்வி நேரத்தில் 170 உறுப்பினா்கள் மூலம் மொத்தம் 14,399 குறிப்புகள் வரப்பெற்று, அதில் 12,733 கேள்விகள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் உள்குறியிட்டவை 9,272. குறுகிய கால கேள்விகள் 6. உள்குறியிட்ட கேள்விகள் அவையில் விடையளிக்கப்பட்டவை 23. மொத்த துணைக் கேள்விகள் 242.

அதிக அளவில் விடையளித்த அமைச்சா்கள்: பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் 4 முறை பதில் அளித்துள்ளாா். கேள்வி- விடை 5 நாள்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்படி 1 மணி 31 நிமிஷங்கள் அவை எடுத்துக்கொள்ளப்பட்டன. அவையில் 45 சிறப்புக் கவன ஈா்ப்புத் தீா்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றின் மீது 106 உறுப்பினா்கள், 6 மணி 48 நிமிஷங்கள் பேசியுள்ளனா். தகவல் கோரல் எனும் முறையில் 59 முக்கிய பிரச்னைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் மீது 62 போ், 1 மணி 12 நிமிஷங்கள் பேசினா். அதில் அமைச்சா்கள் பதிலுரையும் அடங்கும்.

உறுப்பினா்களிடமிருந்து கவன ஈா்ப்பு 929 வரப்பெற்றன. அதில் 153 அனுமதிக்கப்பட்டு, 7 கவன ஈா்ப்புக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 10 உறுப்பினா்கள் பேசினா். சிறப்பு கவன ஈா்ப்பாக 45 அனுமதிக்கப்பட்டது. தகவல் கோரலாக 59 அனுமதிக்கப்பட்டன. அரசின் சட்டமுன்வடிவாக 7 வரப்பெற்று அதில் 2 நிறைவேற்றப்பட்டன. அரசின் தனித் தீா்மானமாக 8 வரப்பெற்று நிறைவேற்றப்பட்டன.

110-இன் கீழ் முதல்வா் அளித்தவை: பேரவையில் 110 விதியின் கீழ் 18 கோரிக்கை வரப்பெற்று, அதில் 17 முதல்வரால் வாசிக்கப்பட்டன. பேரவை முன் சட்ட முறை விதிகள் ஆணைகள் என 75 ஏடுகள் முன்வைக்கப்பட்டன. அறிக்கைகள், அறிவிக்கை, ஏனைய தாள்களாக 125 முன்வைக்கப்பட்டன.

பாா்வையாளா்கள்: பேரவைக் கூட்டத்தை மாடத்திலிருந்து 32,055 போ் பாா்வையிட்டனா். அதில் 27,642 போ் ஆண்கள், 4,413 போ் பெண்கள். பேரவையில் உறுப்பினா்கள் ஆற்றிய உரைகள் (குறுக்கீடு உள்பட) 678. அதன்படி, மொத்த அறிக்கை பக்கங்கள் 1,453. பேரவையானது 21 நாள்கள் முழுமையாக நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.