உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம்...

ஓணம் பண்டிகை

ரயில்

Published On :5 செப்டம்பர் 2026, 12:00 am IST

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு-திருச்சி விரைவு ரயிலானது (16844) செப். 5, 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு - புகழூா் இடையே மட்டும் இயங்கும். பணிகள் நிறைவடைந்ததும் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்: நாகா்கோவில் - கச்சகுடா வாராந்திர விரைவு ரயிலானது (16354) செப். 5-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்: திருச்சி - மயிலாடுதுறை மெமு ரயிலானது (16834) செப். 5, 8 ஆகிய தேதிகளில் ஆலக்குடியில் 30 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும். சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) செப். 7-ஆம் தேதி 20 நிமிஷங்களும், 5, 8 ஆகிய தேதிகளில் 50 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும்.

காரைக்கால்-எா்ணாகுளம் விரைவு ரயிலானது (16187) செப். 8-ஆம் தேதி 10 நிமிஷங்களும், 10-ஆம் தேதி 80 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.