
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
தமிழகத்தில் 27 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யாவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி. ரவிக்குமார், வேளாண்மை - உழவர் நலத்துறை இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக டி. மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையர் ஸ்ரேயா சிங் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையராக ஞானதேவ் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை இயக்குநர் ஜெயசீலன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை இயக்குநராக ராஜகோபால் சுங்கரா, விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
Summary
IAS officers transferred in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





