வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது! மு.க. ஸ்டாலின்தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பில்லை! மார்க்சிய கம்யூ. அறிவிப்பு! திமுகவினரால் எனக்கு ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது! பேரவைத் தலைவர்

முன்னாள் படைவீரர்கள், விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ. 6000-ஆக உயர்வு! பொதுத் துறை அறிவிப்புகள்!

பொதுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து...

cm vijay

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :4 வினாடிகள் முன்பு

சட்டப்பேரவையில் இன்று(செப். 8) பொதுச் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்தத் துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

  • முதல்வரின் உதவி மைய இணையதளத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) திறனுடைய சாட்பாட் (Chatbot) மற்றும் உரையாடும் வாய்ஸ்பாட் (Interactive Voicebot) சேவை அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ. 2.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • பொதுமக்கள் முதல்வரின் உதவி மைய இணையதளச் சேவைகளை எளிதில் பயன்படுத்துவதற்கு, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், சென்னை, தலைமைச் செயலகத்திலும் டிஜிட்டல் கியோஸ்க்குகள் (Digital Kiosks) நிறுவுவதற்காக ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பணக்கொடையினை மேலும் உயர்த்தி குடும்பத் தலைவருக்கு ரூ.1,800-ஆகவும், குடும்பத்திலுள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,200- ஆகவும் மற்றும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரூ.600/- ஆகவும் வழங்கப்படும்.

  • முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி பயில வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை அனைத்து படிப்புகளுக்கும் தலா ரூ. 2,000 உயர்த்தி வழங்கப்படும்.

  • வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக பொதுநல நோக்கில் உதவிகளைச் செய்து வரும் அயலகத் தமிழர்களுக்கு 'வெற்றித் தமிழர் விருது' என்ற புதிய விருது வழங்கி கௌரவிக்கப்படும்.

  • வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான உடனடி உலகளாவிய பொருத்தம் (IGM) என்ற தளம் உருவாக்கப்படும்.

  • தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறும் பொருட்டு அவர்களுக்கு இலவசமாக ஜெர்மன் மொழிப்பயிற்சி அளிக்கப்படும்.

  • முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.4000-லிருந்து ரூ.6000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் பல்வேறு நிர்வாகப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த வலைத்தளச் செயலி ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

Summary

The demand for grants for the Public Sector Department was tabled in the Legislative Assembly today (Sept. 8), and key announcements were made on behalf of the department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.