FOLLOW US

ON GOOGLE DISCOVER

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்!

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்து...

Environment

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்! - படம்: தமிழக அரசு

Published On :7 செப்டம்பர் 2026, 3:23 pm IST

சட்டப்பேரவையில் இன்று(செப். 7) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் வே. ராஜீவ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • உயிர்ப்பன்மயத்தினை மேம்படுத்திப் பாதுகாக்கும் நோக்கில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நகர உயிர்ப்பன்மயக் குறியீடு உருவாக்கப்படும்.

  • காலநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அறிவைப் பகிரவும் காலநிலை மாற்றத் தகவல் தொடர்புக்கான கருவித்தொகுப்பு மற்றும் இணையவழி கற்றல் தளம் உருவாக்கப்படும்.

  • தமிழ்நாட்டை காலநிலை மீள்திறன்மிகு மாநிலமாக மாற்றும் முயற்சியில், ஆண்டுதோறும் 200 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 5 அரசுக் கல்லூரிகள் ரூ. 53.75 கோடி மதிப்பீட்டில் நீலப் பசுமை வளாகங்களாக மாற்றியமைக்கப்படும்.

  • தமிழ்நாட்டில் ஆறு இடங்களில் காலநிலை மீள்திறன் மையங்கள் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

  • நிகழ்நேர சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் விரைவு நடவடிக்கைக்காக ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் ஐந்து நடமாடும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு வாகனங்கள் இயக்கப்படும்.

  • சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் அவசரநிலை நடவடிக்கை அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் ஐந்து அவசரகால பதிலளிப்பு மையங்கள் நிறுவப்படும்.

  • காற்று தர கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் 80 இடங்களில் உணரிகை (சென்சார்) அடிப்படையிலான தொடர் சுற்றுப்புற காற்று தரக் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.

  • தொழிற்சாலைகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறனை மேம்படுத்த தன்னார்வ பசுமை மதிப்பீடு சான்றிதழ் பெறும் தொழிற்சாலைகளுக்கு ஊக்க சலுகைகள் அளிக்கப்படும்.

  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சொந்தமான அலுவலகங்களில், நிலைத்த பசுமைக் கட்டட முன்முயற்சிகள் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

Summary

Minister V. Rajeev made several key announcements today (Sept. 7) while presenting the demands for grants for the Environment and Climate Change Department in the Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.