மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கால்நடை காவலன் விருது... கால்நடை பராமரிப்புத் துறைக்கு வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள்!

கால்நடை பராமரிப்புத் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து...

kamali

அமைச்சர் செ. கமலி - படம்: சட்டப்பேரவை

Published On :2 செப்டம்பர் 2026, 4:49 pm IST

சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்த அமைச்சர் செ. கமலி, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ. கமலி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

  • செட்டிநாடு, நடுவூர் மற்றும் சின்னசேலம் ஆகிய அரசுப் பண்ணைகளில் முயல் வளர்ப்புப் பிரிவுகளை நிறுவி புறக்கடை முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ரூ. 0.28 கோடி செலவில் "புறக்கடை முயல் வளர்ப்புத் திட்டம்" செயல்படுத்தப்படும்.

  • பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.0.70 கோடி செலவில் பன்றி வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்படும்.

  • சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் கிடேரி வளர்ப்பு மையம் அமைக்கப்படும்.

  • தெருவிலுள்ள விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்திற்கான டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.

  • துறைசார் பண்ணைகளில் ரூ.1.25 கோடி செலவில் ஊறுகாய்ப்புல் (Silage) உற்பத்தி அலகுகள் நிறுவப்படும்.

  • கால்நடை மருத்துவ நிலையங்கள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் "கால்நடை காவலன்" விருது அறிமுகப்படுத்தப்படும்.

  • கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Summary

Minister Se. Kamali replied to the debate on the demand for grants for the Animal Husbandry Department in the Legislative Assembly and also made new announcements.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.