
வனவிலங்குகளால் ஏற்படும் சேத இழப்பீடு உயர்த்தப்படும்... வனத் துறை அறிவிப்புகள்!
வனச் துறை சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்து...

வாழை மரங்களை சேதப்படுத்திய வனவிலங்குகள். - படம்: தமிழக அரசு
சட்டப்பேரவையில் இன்று(செப். 7) வனத் துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த வனத் துறை அமைச்சர் ரா.வீ. ரஞ்சித் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
வனத்துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 1,947 சீருடைப் பணியாளர்களுக்கு 12 கோடி ரூபாய் செலவில் அறிமுகப் பயிற்சி அளிக்கப்படும்.
அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் 25 இயற்கைப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மர தடயவியல் மற்றும் மரப்பொருள் பகுப்பாய்வு மையம் மற்றும் ஆராய்ச்சி ஆய்வக வசதிகளை ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான இன வரைவியல் கணக்கெடுப்பு, மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள 43 இயற்கை ஆர்வலர் பயிற்சியாளர்கள் ரூ. 4.2 கோடி செலவில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நடமாடும் வனஉயிரின தடயவியல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரங்களின் மரபணு பாதுகாப்பு மற்றும் மரபியல் மேம்பாட்டுத் திட்டம் ரூ. 50 லட்சம் செலவில் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் தனித்துவமான உயிரினங்கள் மற்றும் தாவர இனங்கள் குறித்து மாவட்ட உயிரியல் பன்முகத்தன்மை சின்னங்கள் ரூ. 5 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
மனித வனவிலங்கு மோதல் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும்.
பிச்சாவரத்தில் படகு சவாரி செய்வதற்கு ரூ. 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 சூரிய ஆற்றல் /மின்னாற்றலில் இயங்கும் படகுகள் வாங்கப்படும்.
வனத்துறையில் பணிபுரியும் சுமார் 6,260 சீருடைப் பணியாளர்களுக்கு ரூ. 1.50 கோடி செலவில் இலவசப் பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அடையாள அட்டையாக வழங்கப்படும்.
Summary
Forest Minister Ra. Ve. Ranjith made several key announcements today (Sept. 7) while presenting the demands for grants for the Forest Department in the Legislative Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







