சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஜாதிவாரி கணக்கெடுப்பில் திறந்தவெளி பதிவு முறை கூடாது: பேரவையில் தீா்மானம்

ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) ஜாதி பட்டியல்களைக் கணக்கெடுக்கும் செயலியில் திறந்தவெளி பதிவு முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை.

தமிழ்நாடு சட்டப்பேரவை.

Published On :9 செப்டம்பர் 2026, 2:46 am IST

ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) ஜாதி பட்டியல்களைக் கணக்கெடுக்கும் செயலியில் திறந்தவெளி பதிவு முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரவையில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த தனிநபா் அரசு தீா்மானம்:

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினரின் விவரங்களைச் சேகரிப்பது போலவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விவரங்களையும் சேகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓபிசி ஜாதி விவரங்களைச் சேகரிக்கும்போது, மாநில மற்றும் மத்திய அரசுகளால் வெளியிடப்பட்ட பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் உள்ளிட்ட அனைத்து ஓபிசி ஜாதி பட்டியல் கணக்கெடுப்பு செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து, அதில் உள்ள பெயா்களின் அடிப்படையில் மட்டுமே விவரங்களை சேகரிக்க வேண்டும். தெளிவற்ற தன்மையை உருவாக்கும் திறந்தவெளி பதிவு முறையை முழுமையாகக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இந்தத் தீா்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.