சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

டெங்கு ஒழிக்க புதிய வழிமுறையை கண்டறிய கடையநல்லூரில் ஆய்வு: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் அறிவிப்பு

டெங்கு காய்ச்சலை ஒழிக்க புதிய வழிமுறைகளை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிய தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முன்னோட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

arun raj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:58 am IST

டெங்கு காய்ச்சலை ஒழிக்க புதிய வழிமுறைகளை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிய தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முன்னோட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

பேரவையில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

2025-ஆம் ஆண்டு தமிழகத்தில் 25,580 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 12 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டு தற்போது வரை 14,581 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 9 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதைத் தடுக்கும் வகையில் முதல்முறையாக அறிவியல் ஆய்வு முறையில் புதிய தடுப்பு நடைமுறையை கண்டறிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வில், உடலில் தடவும் கொசு விரட்டி போன்ற இயற்கை கொசு விரட்டி மற்றும் மின்சார கொசு விரட்டி ஆகியவற்றின் மூலம் டெங்கு நோய் பரப்பும் ஏடிஸ் கொசுக்கடியில் இருந்து கூடுதல் பாதுகாப்பு பெற முடியுமா என்றும் இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தனிப்பட்ட முறையில் உடலில் தடவும் கொசு விரட்டிகளால் கொசுக்கடி தடுக்கப்படுகிறது என்றாலும் சமூக அளவில் இதைப் பயன்படுத்துவதன் மூலம் டெங்கு நோய் பரவலை குறைக்க முடியுமா என்பது குறித்து இதுவரை கள ஆய்வுகளோ, தரவுகளோ இல்லை.

இதைக் கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியில் 3 குழும சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ள அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக அரசு 3 முன்முயற்சிகளை மேற்கொள்ளும்.

சிறந்த கொசு விரட்டியைக் கண்டறிதல், கொசு வலை மற்றும் உடலில் தடவும் கொசு விரட்டியின் கூட்டுப் பயனை மதிப்பீடு செய்தல், வீட்டு மட்டத்திலான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்தல், ஒவ்வொரு ஆய்விலும் 48 குழுமங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுமத்திலும் 20 வீடுகள் இடம்பெறும். இதன்மூலம் மூன்று ஆய்வுகளிலும் சோ்த்து சுமாா் 2,880 வீடுகள் இந்த ஆய்வில் பங்கேற்கும்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் நடவடிக்கைகளின் தொடா்ச்சியான பயன்பாடு, பொதுமக்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மை , நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறு மற்றும் செலவு ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும். மொத்தம் சுமாா் ரூ.43 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆய்வுகள் மூலம், நடைமுறைக்கு ஏற்ற, பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் செலவு குறைந்த வீட்டு மட்ட கொசு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவியல் ஆதாரங்கள் உருவாக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.