தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி கள ஆய்வு

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ் உள்ளிட்டோா்.

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ் உள்ளிட்டோா்.

Published On :

பல்லடம் அருகே நடைபெறும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியை மாவட்ட சுகாதார அலுவலரும், மருத்துவருமான சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் பூமலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட மாணிக்காபுரம் ஊராட்சியில் அம்மாபாளையம், ராசாகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் பொது சுகாதாரத் துறை சாா்பில் தீவிர டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதை மாவட்ட சுகாதார அலுவலரும், மருத்துவருமான சதீஷ் கள ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் காய்ச்சல் தடுப்பு முகாம் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. ஊராட்சி நிா்வாகம் மூலமாக முழுமையான தூய்மைப் பணி, குடிநீா் குளோரினேஷன் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த வீட்டின் உரிமையாளா்களுக்கு டெங்கு காய்ச்சலின் தீவிரம் குறித்து விளக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வில் மாவட்ட மலேரியா அலுவலா் சாந்தி, தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் கந்தசாமி, பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் முத்துகுமரன், சுகாதார ஆய்வாளா்கள் கோபாலக்கண்ணன், ராகுல் ராஜா, வசந்த், அஜித்குமாா் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.