கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய விருதுநகர் தம்பதி! பிடிபட்டது எப்படி?

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய விருதுநகர் தம்பதி கைது செய்யப்பட்டிருப்பது குறித்து...

பீரோவை உடைத்து திருடிய கொள்ளையர்கள்.

Published On :8 செப்டம்பர் 2026, 4:23 pm IST

காட்பாடியில் 36 சவரன் நகை கொள்ளையடித்த திருடனை, காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தில் காதல் மனைவிக்கு புது நகைகளை வாங்கி கொடுத்து சொகுசு காரில் வலம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருடனைக் கண்டுபிடித்த காட்பாடி போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. இவரது கணவர் முன்னாள் டெல் ஊழியர் ரவிக்குமார். இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு கடந்த 27 தேதி அன்று அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அன்று இரவு வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த மூன்று அறைகளிலும் இருந்த பீரோக்களில் இருந்த 36 சவரன் நகை கொள்ளை போனதையறிந்து காட்பாடி போலீசாருக்கு புகார் அளித்தனர்.

புகாரினை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து ஆங்காங்கே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பழைய குற்றவாளிகளின் தகவல்களை சேகரித்து விசாரிக்கத் தொடங்கினார்.

காட்பாடி டெல் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக காரில் சுற்றிகொண்டிருந்த கணவன் - மனைவி இருவரையும் பிடித்துவந்து விசாரித்தபோது போது அதிலிருந்த நபர் விருதுநகர், செவ்வபட்டி காரியாபட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துவேல் கார்த்திக் என்பதும் அவரது மனைவி 30 வயதான பிரபாவதி என்பதையும் கண்டுபிடித்தனர்.

கணவன் - மனைவி இருவரும் காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்கு விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் நகையை திருடியது தாங்கள் தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் மேலும் விசாரித்த போது முத்துவேல் கார்த்திக் ஏற்கனவே சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அவர் மீது விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்பதுக்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதும் போலீசார் கண்டறிந்தனர்.

மேலும் விசாரணை மேற்கொண்ட போது திருடிய நகைகளை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நகைக் கடைகளில் அடகு வைத்தும் பழைய நகைகளை மாற்றி காதல் மனைவிக்கு புது நகைகளை வாங்கிக் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டு உள்ளார்.

திருடிய நகையை விற்ற பணத்தில் பத்து லட்ச ரூபாய் மதிப்பில் சொகுசு கார் வாங்கி மனைவி, பிள்ளைகளுடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்ததும் ஒப்புக்கொண்டு உள்ளார்.

அவரிடம் மேலும் விசாரித்த போது உள்ளூரில் திருடினால் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக அவர் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊர்களில் சென்று ஐடி ஊழியர்கள் என்றுகூறி வீடு எடுத்து தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி சித்தூர் பகுதியில் அவர்கள் தங்கி அங்கிருந்து தமிழக - ஆந்திர எல்லை பகுதியான கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனி வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் நோட்டமிட்ட போது வெளியூருக்கு காரில் சென்ற மரியா - ரவிக்குமார் தம்பதி எப்படியும் திரும்புவதற்கு நேரமாகும் என்பதையறிந்து பிற்பகல் 3 மணிக்கு மேல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையடித்த நகையை விற்று தன் காதல் மனைவிக்கு புதிய நகைகளை வாங்கி கொடுத்ததும் அந்த பணத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கி உல்லாசமாக ஊர் சுற்றி வந்தததை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் சித்தூர், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதியில் அடமானம் வைத்திருந்த மற்றும் விற்கப்பட்ட 26 சவரன் நகைகளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவன் - மனைவி இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.