வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! முதல்வரின் செயலை ஏற்க முடியாது! நயினார் நாகேந்திரன்

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு என நயினார் நாகேந்திரன் அறிவிப்பு...

TN BJP president Nainar Nagenthran

நயினார் நாகேந்திரன் - IANS

Published On :

வரும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வருகிற அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப். 9 முதல் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அக். 6 வாக்குப்பதிவும் அக். 9 வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தவெக கூட்டணி, திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்பு பேரவைத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் முறையே மரகதம் குமாரவேல், சத்யபாமா வென்ற நிலையில் அவர்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இவர்களே தற்போது தவெகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

"எதற்காக இந்த இடைத்தேர்தல், என்ன அவசியம் வந்தது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். குதிரை பேரத்தால் இந்த தேர்தல் வந்திருக்கிறது.

எங்ளுடைய கூட்டணியில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் தற்போது தவெகளில் போட்டியிடுகின்றனர்;. திங்கள்கிழமை வருகிறேன். யாரும் ஓடிவிட வேண்டாம் என சொன்ன முதல்வர் எதைப் பற்றியும் பேசவில்லை.

தவெக அரசு மதச்சார்புள்ள அரசு. கிறிஸ்தவ மதத்தைப் பற்றி பேரவையில் பேசுகிறார்கள். எந்த பேரவைத் தலைவரும் பேரவையில் பைபிளைக் குறிப்பிட்டுப் பேசியதில்லை. அமைச்சர் மரிய வில்சன் உள்பட பலரும் மதச்சார்புடன் பேசிவிட்டு மதச்சார்பற்ற அரசு என்று சொல்லலாமா?

பேரவையில் முதல்வர் உருவக் கேலி செய்யும் வகையில் பேசியது அநாகரீகமானது" என்று பேசினார்.

Summary

BJP to support AIADMK in the by-election: Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.