லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

முதல்வர் விஜய் லண்டன் சென்றடைந்தது பற்றி...

C joseph vijay

சென்னை விமான நிலையத்தில் முதல்வர் விஜய் - CMOTamilnadu

Published On :

தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்றடைந்தார்.

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதல்வா் ச.ஜோசப் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.

துபை வழியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் விஜய் சென்றடைந்தார்.

ஹீத்ரோ விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். 6 நாள்கள் தங்கியிருக்கும் அவா் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.

முதல்வர் விஜய்யுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Summary

Chief Minister Vijay has arrived in London - Enthusiastic welcome from Tamils

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER