தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

முதல்வர் விஜய் பயணித்த விமானம் ஃபிளைட் ரேடாரில் முதலிடம்!

முதல்வர் விஜய் பயணித்த விமானம் ஃபிளைட் ரேடாரில் முதலிடம் பிடித்தது பற்றி...

vijay flight

முதல்வர் விஜய் பயணித்த விமானம் ஃபிளைட் ரேடாரில் முதலிடம் - Flighradar24

Published On :

தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் பயணித்த துபை விமானத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் டிராக் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 10.05 மணிக்கு புறப்பட்ட எமிரட்ஸ் விமானத்தில் துபை சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து லண்டனுக்குச் செல்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய் துபைக்குச் சென்ற எமிரட்ஸின் யுஏஇ547 விமானத்தை, ஃபிளைட் ரேடார் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிராக் செய்துள்ளனர். இதனால், அந்த விமானம் உலகளவில் அதிகளவில் டிராக் செய்யப்பட்ட விமானத்தில் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இதற்கு முன்னதாக, தேர்தல் பிரசாரங்களின் போது முதல்வர் விஜய் பயணித்த தனி விமானத்தையும் ஃபிளைட் ரேடார் தளத்தில் அதிகளவிலானோர் டிராக் செய்திருந்தனர்.

செப்டம்பர் 16 வரை லண்டனில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே, வருகின்ற சனிக்கிழமை சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெறும் கார் பந்தயப் போட்டியைத் தொடங்கிவைத்து, பார்வையிடவுள்ளார். இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The flight travelled Chief Minister Vijay tops the Flightradar rankings!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.