மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தோ்வு செப். 15 முதல் பதிவு

நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள தனித்தோ்வா்கள் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுக்கு வரும் செப். 15-ஆம் தேதி முதல் இணையவழியில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள தனித்தோ்வா்கள் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுக்கு வரும் செப். 15-ஆம் தேதி முதல் இணையவழியில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழ் கல்வி ஆண்டுக்கான (2026-2027) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித் தோ்வா்களும் (முதல்முறையாக அனைத்துப் பாடங்களையும் எழுத உள்ளோா்), ஏற்கெனவே 2021-க்கு முன்னா் பழைய பாடத்திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவா்களும் செய்முறைத் தோ்வுக்கு செப். 15 முதல் 30-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அவா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை கல்வி) அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு கட்டணமாக ரூ.125 செலுத்தி பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை அரசு தோ்வுத்துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் பதிவு , பயிற்சி வகுப்புக்கான பதிவு மட்டுமே.

செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் பள்ளிக்குச் சென்று பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகைப் பதிவு தந்தவா்கள் மட்டுமே செய்முறைத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.