
ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான்..! - சாலமன் பாப்பையா மறைவுக்கு சிஎஸ்கே இரங்கல்!
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு சிஎஸ்கே அணி இரங்கல்...

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு சிஎஸ்கே அணி இரங்கல்... - எக்ஸ்
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90) இன்று (செப். 11) வயது மூப்பினால் காலமானார். அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அணியான சிஎஸ்கே-வின் நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுபற்றி, அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…!”
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான் தொடங்கும். எங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்த நீங்கள், நம் கொண்டாட்டங்களின் மறக்க முடியாத அங்கம்!
தமிழறிஞராக, உங்கள் தமிழ்மீதான அன்பும், உங்கள் சொற்களும் பல தலைமுறைகளின் நெஞ்சில் நீங்காத தடம் பதித்தன. தமிழுக்கும், பட்டிமன்றத்துக்கும் தங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும், சாலமன் பாப்பையா அய்யா” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
âà®à®©à¯à®ªà¯à®¤à¯ தாயà¯à®®à®¾à®°à¯à®à®³à¯â¦ à®à®°à¯à®®à¯à®ªà¯ பà¯à®°à®¿à®¯à¯à®°à¯à®à®³à¯â¦ à®à®©à®¿à®¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯à®à®³à¯â¦!â
— Chennai Super Kings (@ChennaiIPL) September 11, 2026
தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®²à¯ à®à®µà¯à®µà¯à®°à¯ பணà¯à®à®¿à®à¯à®à¯ à®à®¾à®²à¯à®¯à¯à®®à¯ à®à®à¯à®à®³à¯à®à®©à¯à®¤à®¾à®©à¯ தà¯à®à®à¯à®à¯à®®à¯. à®à®à¯à®à®³à¯à®à¯ à®à®¿à®°à®¿à®à¯à®à®µà¯à®®à¯, à®à®¿à®¨à¯à®¤à®¿à®à¯à®à®µà¯à®®à¯, விவாதிà®à¯à®à®µà¯à®®à¯ வà¯à®¤à¯à®¤ நà¯à®à¯à®à®³à¯, நம௠à®à¯à®£à¯à®à®¾à®à¯à®à®à¯à®à®³à®¿à®©à¯ மறà®à¯à® à®®à¯à®à®¿à®¯à®¾à®¤ à®à®à¯à®à®®à¯!
தமிழறிà®à®°à®¾à®, à®à®à¯à®à®³à¯ தமிழà¯à®®à¯à®¤à®¾à®© à®à®©à¯à®ªà¯à®®à¯,⦠pic.twitter.com/yjYKgSVxgg
Summary
The Chennai Super Kings team has expressed its condolences on the passing of Tamil scholar Solomon Pappaiah.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






