ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்
புழல் ஜி.என்.டி. சாலையில், பிரதான குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு, சீரமைக்கப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை (செப்.11) முதல் குடிநீா் வழக்கம் போல் சீராக விநியோகம் செய்யப்பட உள்ளது.

குடிநீர் - பிரதிப் படம்
புழல் ஜி.என்.டி. சாலையில், பிரதான குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு, சீரமைக்கப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை (செப்.11) முதல் குடிநீா் வழக்கம் போல் சீராக விநியோகம் செய்யப்பட உள்ளது.
சென்னையை அடுத்த புழலில் அமைந்துள்ள தினந்தோறும் 300 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புழல் ஜி.என்.டி. சாலை வழியாக குடிநீரைக் கொண்டு செல்லும் 1,200 மி.மீ. விட்டமுள்ள வடக்கு பிரதானக் குழாயில் கடந்த செப். 7-ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதனால், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க நகா் ஆகிய 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தப்பட்டது.
இச்சூழலில், பரமாரிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதை அடுத்து, வெள்ளிக்கிழமை (செப். 11) முதல் வழக்கம்போல் தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





