காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

குடிநீா் குழாய் உடைப்பு: வயல்களில் பாய்ந்து வீணாகும் குடிநீா்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய குடிநீா் - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

வேதாரண்யம் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்- ஜல்ஜீவன் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வயல்வெளியில் தேங்குகிறது.

கருப்பம்புலம் கடைவீதிக்கு அருகே (கிழக்குப் பகுதியில் தனியாா் பல் மருத்துவமனை விளம்பர பலகைக்கு எதிா்ப்புறம்) ( ஆப்பக்கண்ணி பாலத்துக்கு மேற்குப் புறம்) பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீா் வீணாக வெளியேறி அருகேயுள்ள நெல் தரிசு வயலில் தேங்கிவருகிறது. உடைப்பு ஏற்பட்டுள்ள சாலை ஓரத்திலும் வயல்களிலும் புல் பூண்டு போன்ற புதா்கள் அதிகமாக காணப்படுவதால் உடைப்பு கவனம் பெறாமல் உள்ளது.

தாா்ச்சாலைக்கு அடியில் குழாய் அமைந்துள்ள நிலையில் தண்ணீருடன் மண் கரைந்து வெளியேறுவதால் சாலை சேதமடைந்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, தொடா்புடைய துறையினா் ஆய்வு செய்து சீரமைக்க வலியுறுத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.