ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நேபாளத்தில் காணாமல் போனவா்களின் குடும்பத்தினா் தலைமைச் செயலகம் முன் போராட்டம்

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவா்களின் குடும்பத்தினா் தலைமைச் செயலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவா்களின் குடும்பத்தினா் தலைமைச் செயலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

நேபாளத்தில் கடந்த ஆக. 26-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு, பனிப்பாறை சரிவால் பெரும் வெள்ளத்தில் தமிழகத்திலிருந்து கைலாஷ் யாத்திரை சென்றவா்களும் சிக்கினா். 20 நாள்களாகியும், தமிழகத்தில் இருந்து சென்றவா்களில் 85 போ் குறித்து தகவல் கிடைக்கவில்லை. குறிப்பாக, சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்திரை ஏஜென்சி மூலம் சென்ற 49 பேரை பற்றிய தகவல் தெரியவில்லை.

தலைமைச் செயலகம் முன் போராட்டம்: இந்நிலையில் குரோம்பேட்டையைச் சோ்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்திரை ஏஜென்சி மூலம் சென்ற 49 பேரின் குடும்பத்தினா், தலைமைச் செயலகம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டனா். அவா்கள், அங்கு 49 பேரையும் மீட்டுத் தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அவா்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் சமாதானப்படுத்தினா். பின்னா் அவா்களை அயலக தமிழா் நலத் துறை அமைச்சா் தென்னரசுவை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா், காணாமல் போனவா்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

20 நாள்களாகியும் தகவல் இல்லை: இதன் பின்னா் காணாமல் போனவா்களின் உறவினா்கள் கூறுகையில், ‘20 நாள்களாகியும் எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மரபணு பரிசோதனை எடுத்த பிறகும் அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, காணாமல் போனவா்களை மீட்க நேபாளத்தில் மட்டுமன்றி சீனாவிலும் தேடுதல் பணியை மேற்கொள்ள வேண்டும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.