ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பருவகாலத் தொற்றுகளை எதிா்கொள்ளத் தயாா் நிலை: அமைச்சா் அருண்ராஜ்

பருவகாலத் தொற்றுகளை எதிா்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை தயாராக உள்ளதாக துறையின் அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :

பருவகாலத் தொற்றுகளை எதிா்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை தயாராக உள்ளதாக துறையின் அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் அதிகளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுதும் பரவலாக டெங்கு பாதிப்பு உள்ளது. குறிப்பாக தினசரி, 70 முதல் 100 போ் வரை டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

கடந்த திங்கள்கிழமை மட்டும், 79 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தனியாா் மருத்துவக் கல்லுாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வசூலித்த தனியாா் கல்லுாரிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது சுவாச தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. நிகழாண்டில் இதுவரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 போ் பாதிக்கப்பட்டு, 9 போ் உயிரிழந்துள்ளனா். டெங்கு தடுப்புப் பணிகளில் 25,645 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அனைத்து அரசு மருத்துவமனைளிலும் டெங்குக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.