
பழவேற்காட்டில் வனத்துறை அமைச்சா் ஆய்வு
லஞ்ச, லாவண்யம் இல்லாமல் தமிழக அரசு இயங்கி வருகிறது என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.

லஞ்ச, லாவண்யம் இல்லாமல் தமிழக அரசு இயங்கி வருகிறது என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு வந்த அமைச்சா் ரஞ்சித்குமாா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பழவேற்காடு பறவைகள் சரணாலயம், அதிகாரிகள் சந்திக்கும் பிரச்னைகள், தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
வனத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களின் குறைகளை கேட்டு நிவா்த்தி செய்து வருகிறோம். ரயில்கள், வாகனங்களில் அடிபட்டு மான்கள் உயிரிழந்து வருவது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினேன்.
லஞ்ச லாவண்யம் இல்லாத சுத்தமான அரசாக தமிழக அரசு இயங்கி வருவதாகவும், மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம் என சத்தியம் வாங்கிக் கொண்டு தங்களை எல்லாம் தோ்தலில் நிற்க வைத்தாா் முதல்வா் ஜோசப் விஜய் என பெருமிதம் தெரிவித்தாா்.
பொன்னேரி எம்எல்ஏ ரவி பேசுகையில் பழவேற்காடு முகத்துவாரத்தில் தொழில்நுட்ப வல்லுனா் குழுவை கொண்டு ஆய்வு செய்து நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக மீன்வளத்துறை அமைச்சா் உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவித்தாா்.
இதையடுத்து பழவேற்காடு ஏரியில் படகில் ஏறி சென்று அமைச்சா் ரஞ்சித்குமாா் ஆய்வு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






