பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அமைச்சர் வன்னி அரசிடம் 4 முறை பேசியுள்ளேன்! பாரதிதாசனுக்கு நிதி வழங்க பெ. சண்முகம் வலியுறுத்தல்!

மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

cpim urges

மாணவர் பாரதிதாசன் - பெ. சண்முகம் - கோப்புப் படம்

Published On :

மலேசியாவில் கல்வி பயிலும் மாணவர் பாரதிதாசனுக்குத் தமிழக அரசு உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் தனக்கு வரவேண்டிய கல்வி உதவித்தொகை இன்னும் வரவில்லை என்றும், இதனால், தன்னைக் கல்லூரியை விட்டு நீக்கப் போகிறார்கள் என்றும் கூறி கண்ணீருடன் இன்று (செப். 17) விடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோவில், ஆவணங்கள் அனைத்தும் முறையாகச் சமர்ப்பித்தும் தமிழக அரசு தனக்கு உரிய நிதியை விடுவிக்கவில்லை என்றும் ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்குச் செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளது பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், காரணம் என்னவாக இருந்தாலும் அவருடைய படிப்பு பாதிக்கும் வகையில் அரசு நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறி அவரின் கல்வியைத் தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் அவர்களின் கல்வித் தொகை விடுவிக்க வேண்டி சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு. வன்னி அரசு அவர்களிடம் நான்கு முறை பேசி உள்ளேன். ஒரு பகுதி உதவித்தொகை விடுவிக்கப்பட்டது.

காரணம் என்னவாக இருந்தாலும் அவருடைய படிப்பு பாதிக்கும் வகையில் அரசு நடந்து கொள்ளக் கூடாது. எனவே, உடனடியாக மீதி உதவித்தொகை முழுவதையும் அவருக்கு கிடைக்கச் செய்ய முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உதவிட வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

CPIM has urged the Tamil Nadu government to provide educational funding to Bharathidasan, a student pursuing his studies in Malaysia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.