சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

இடைத்தேர்தல்! அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் இல்லை!

அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் இடம்பெறாதது பற்றி...

cv shanmugam

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர். - படம்: விடியோ கிளிப்

Published On :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் கணிதா சம்பத்தும் தாராபுரம் (தனி) தொகுதியில் பானுமதியும் அதிமுக வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, துணைப் பொதுச் செயலர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை, கட்சி தேர்தல் குழு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், முன்னாள் அமைச்சர்களும் மூத்த உறுப்பினர்களுமான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் பெயர்கள் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

சமீபகாலமாக கட்சித் தலைமையின் மீது எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். முன்னாள் நிர்வாகிகளான சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

By-election! S.P. Velumani and C.V. Shanmugam are not on the AIADMK's list of star speakers!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER