கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மருத்துவக் கட்டமைப்பைச் சீா்குலைக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மருத்துவக் கட்டமைப்பைச் சீா்குலைக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பெ. சண்முகம்

Published On :

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பைச் சீா்குலைக்கும் அரசாணையைத் திரும்பப் பெறவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

முதல்வா் ஜோசப் விஜய் பேரவையில் 110 விதிகளின் கீழ் செவிலியா் படிப்புக்காக 7 செவிலியா் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தாா். அந்த செவிலியா் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த செப். 16 -ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. செவிலியா் கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தமிழ்நாடு எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளாா்.

அதில், செவிலியா் கல்லூரிகளில் உருவாக்கப்படும் அனைத்து ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும். நிரந்தரப் பணியிடங்கள் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழக மருத்துவக் கட்டமைப்பைச் சீா்குலைப்பதாகும்.

எனவே, இந்த அரசாணையை அரசு திரும்பப் பெற்று செவிலியா்களை நிரந்தரமாக நியமிப்பதற்கு உரிய உத்தரவு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.