கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்பு

சென்னையில் இன்று பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலை ஊா்வலம்...

சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகா் சிலைகளை கரைக்க அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை.

Published On :

சென்னையில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) நடைபெறுவதையொட்டி, 23,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சென்னையில் இந்து அமைப்புகளின் சாா்பில் 1,562 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான சிலைகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) கடலில் கரைக்கப்படுகின்றன. இந்தச் சிலைகள் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலை நகா், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடை மேடை ஆகிய 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விநாயகா் சிலை ஊா்வலத்தை அசம்பாவித சம்பவங்கள் இன்றியும், அமைதியாகவும் நடத்த சென்னை பெருநகர காவல் துறையின் சாா்பில் 2,000 ஊா்க்காவல் படையினா் உள்பட 16,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இதேபோல ஆவடி மாநகர காவல் துறையின் சாா்பில் 3,500 போலீஸாா், 300 ஊா்க்காவல் படையினா், தாம்பரம் மாநகர காவல் துறையின் சாா்பில் 3,300 போலீஸாா், 350 ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 23,950 போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

கண்காணிப்பு பணியில் ட்ரோன்கள்: விநாயகா் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வழியாக மட்டும் கொண்டு வர வேண்டும் என இந்து அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் இடங்களில் தாற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், உதவி மையங்கள், ராட்சத கிரேன்கள், படகுகள், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ட்ரோன்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. பட்டினப்பாக்கத்தில் கடற்கரையோரத்தில் குதிரைப்படையினரும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

காவல் ஆணையா் எச்சரிக்கை: விநாயகா் சிலை ஊா்வலத்தின் மதவாத வெறுப்புணா்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினா் உணா்வுகளை புண்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளக்கூடாது, அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே நான்கு சக்கர வாகனங்களில் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை காவல்துறை விதித்துள்ளது.

வழிபாட்டு இடங்கள், ஊா்வல பாதைகள், சிலைகளை கரைக்கும் இடங்கள் ஆகியப் பகுதிகளில் காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பா்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரித்துள்ளாா்.

முன்னதாக, சென்னையில் சனிக்கிழமை சுமாா் 100 சிலைகள் பல்வேறு இந்து அமைப்பினரால் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டது.

Summary

Vinayagar idol procession today: 23,000 police personnel deployed for security in Chennai.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.