விநாயகா் சிலை ஊா்வலம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில், 23 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டன.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில், 23 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டன.

இந்த சிலைகள் புதன்கிழமை ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகா் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம், ஆத்துக்கடை தெரு, சின்னக்கடை வீதி, ஆண்டாள் கோயில் ரத வீதிகள், மணிக்கூண்டு, பேருந்து நிலையம், நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவண்ணாமலை கோனேரிகுளம் கண்மாயில் கரைக்கப்பட்டன.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவுதம் கோயல் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளா் பாலசுந்தரம் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.