காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் விஜய்!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தியதைப் பற்றி...

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் விஜய்.

Published On :

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து, உடல்நலம், வருகைப் பதிவு, கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்முறையாக 2022-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தையொட்டி, சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (செப். 22) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.

காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் விஜய், சர்க்கைப் பொங்கல் பரிமாறினார். மேலும், அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து அவர் உணவு உட்கொண்டார்.

அதன்பின்னர், பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

Summary

Chief Minister Vijay, who inaugurated the 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme', sat with school students and had the meal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.