காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முதல்வர் விஜய் பங்கேற்கும் தங்க மோதிர திட்ட தொடக்க விழா: உசிலம்பட்டியில் இருந்து மாற்றம்!

முதல்வர் விஜய் பங்கேற்கும் தங்க மோதிர திட்டத்தின் தொடக்க விழா உசிலம்பட்டியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்​டுள்​ள​தைப் பற்றி...

குழந்தைகளுடன் முதல்வர் விஜய். - CMOTamilnadu

Published On :

தமிழக அரசின் தாய்​மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனைக்கு மாற்​றப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்​கும் ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ திட்​டத்தை முதல்​வர் விஜய் கடந்த ஜூன் மாதத்தில் அறி​வித்திருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப். 15-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

இந்தத் ​திட்​டத்​தில் அரசு மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்​கப்​படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலில் இந்தத் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்.15 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் செப்.28-ல் தொடங்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விழா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை அரசு மருத்துவமனைக்கு செப். 28 ஆம் தேதி முதல்வர் விஜய் வருவதையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன்படி மதுரை மாவட்டத்தில் தற்போதுவரை 6,500 குழந்தைகள் தங்க மோதிரம் பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

குழந்தைகளுக்கு வழங்குவதற்கான மோதிரங்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக தாய்மாமன் தங்கமோதிரத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய், அன்றைய தினத்தில் பிறக்கும் 50 குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Reports indicate that the launch event for the Tamil Nadu government's 'Thaimaman Thanga Mothiram' scheme has been shifted to the Government Rajaji Hospital in Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.