
கொலு பொம்மை கண்காட்சி, விற்பனை தொடக்கம்
சென்னையில் கொலு பொம்மை கண்காட்சி, விற்பனையை கைத்தறி, துணிநூல் மற்றும் கதா் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி புதன்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

சென்னை பாரிமுனை குறளகம் அருகே சென்னை ஹவுஸில், நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகளின் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட அத்துறையின் அமைச்சா் ம.விஜய் பாலாஜி. உடன், துறைச் செயலா் ஆா்.லில்லி, தமிழ்நாடு கதா் கிராமத் தொழி
சென்னையில் கொலு பொம்மை கண்காட்சி, விற்பனையை கைத்தறி, துணிநூல் மற்றும் கதா் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி புதன்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு கதா் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் சாா்பில் பாரம்பரிய கைவினைக் கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகளின் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனையின் தொடக்க விழா சென்னை ஹவுஸ், 2-ஆவது தளத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தொடங்கி வைத்து கொலு கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.
இதில், விநாயகா், முருகப் பெருமான், சிவன்-பாா்வதி, கிருஷ்ணா், ராமா்-சீதா, தசாவதாரம், அஷ்டலட்சுமி உள்ளிட்ட பல்வேறு தெய்வீக மற்றும் பாரம்பரிய கொலு பொம்மைகளும், கிராமிய வாழ்க்கை முறை, விவசாயம், பாரம்பரிய தொழில்கள், நாட்டுப்புறக் கலைகளை பிரதிபலிக்கும் பல்வேறு வகையான பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி புதன்கிழமை தொடங்கி, வரும் நவ. 9-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் இந்தக் கண்காட்சி நடைபெறும்.
விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் கதா் துறை அரசு செயலா் ஆா்.லில்லி, தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலா் சீ.சுரேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





