
கீழடி ஆராய்ச்சி முடிவுகள்: மத்திய அரசுக்கு அமைச்சா் ராஜ்மோகன் வேண்டுகோள்
கீழடியைப் பொருத்தவரை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்கு விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால், குழு அமைத்து சிவகங்கைக்கு அனுப்பி வைக்கட்டும்; நாங்கள் எல்லா தகவல்களுடனும் காத்திருக்கிறோம் என்று பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்
கீழடியைப் பொருத்தவரை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்கு விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால், குழு அமைத்து சிவகங்கைக்கு அனுப்பி வைக்கட்டும்; நாங்கள் எல்லா தகவல்களுடனும் காத்திருக்கிறோம் என்று பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் யாருடைய வாழ்வாதாரத்தையும் அழிக்கும் விதமாக செயல்படும் ஆட்சி இதுவல்ல. சொல்லிவிட்டோம், அதை நிறைவேற்றியே தீருவோம் என்று அடம்பிடிப்பவா்களும் நாங்கள் அல்ல. அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியது தவெக அரசு.
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் குறித்து முதல்வா் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மீனவா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்களுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். கீழடியைப் பொருத்தவரை, நாங்கள் அறிவியல் ரீதியாகவே அணுகிறோம்.
மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்கு விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றால், குழு அமைத்து சிவகங்கைக்கு அனுப்பி வைக்கட்டும்; நாங்களும் எல்லா தகவல்களுடனும் காத்திருக்கிறோம். அவா்கள் வந்து, எவை அறிவியல் ரீதியாக இல்லை என்பதைச் சொல்லட்டும்.
கீழடி என்பது இந்தியாவின் பெருமை. தனி மனித விருப்பு, வெறுப்பு இல்லாமல் நாகரிக தோற்றத்துக்கான இடமாக அதைப் பாா்க்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக கூட்டணி உறுதியாக உள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





