100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

முதல்வர் விஜய்யிடம் வைக்கப்பட்ட கோரிக்கை என்ன? அமைச்சர் நிர்மல்குமார்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி...

CM vijay inspection at TNEB office

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு ... - X

Published On :

தமிழகத்தில் தொடர் மின்வெட்டையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு அலுவலங்களில் ஆய்வு செய்த முதல்வர், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் தற்போதைய மின் தேவை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.

முதல்வரின் ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய மின் துறை அமைச்சர் நிர்மல் குமார்,

"தமிழகத்தில் மின் தேவை, மின் உற்பத்தி குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். மின் துறைக்கான தேவைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்தோம். மின் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்தும் பேசினோம். அதற்கு ஏற்கனவே முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தேவையான 600 துணை மின் நிலையங்கள் 2031-க்குள் அமைக்கப்படும். பழைய மின்மாற்றி உள்ளிட்ட உபகரணங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்தாண்டு கோடையில் மின் தேவையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

முந்தைய திமுக அரசு, தேர்தல் நேரத்தில் சரியாக மின் பராமரிப்பு செய்யாத நிலையில், தற்போது பாதிப்புகள், புகார்கள் அதிகமாக வருகின்றன. இதையெல்லாம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்தடை குறித்து ஒரு நாளைக்கு 30,000 புகார்கள் வருகின்றன. சமூக ஊடகங்களிலும் பலர் புகார் பதிவு செய்கின்றனர். இவை அனைத்தும் ஒருங்கிணைத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Summary

Minister nirmalkumar explains about CM vijay inspection at TNEB office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.