பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

அள்ள அள்ள ஆச்சரியங்களுடன் கடலுக்கடியில் புதைந்திருக்கும் பூம்புகார்! வெளியான தகவல்கள்!!

பல்வேறு ஆச்சரியங்களுடன் கடலுக்கடியில் புதைந்திருக்கும் பூம்புகார் பற்றிய தகவல்கள்...

பூம்புகாா் கடற்கரை பகுதி

பூம்புகாா் கடற்கரை பகுதி

Published On :

2000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் துறைமுக நகரம் பூம்புகாரில் கடலுக்கடியில் மறைந்திருக்கிறது, அங்கிருந்து எடுக்கப்பட்ட தொன்மைவாய்ந்த பொருள்களின் மூலம், வளைகுடா மற்றும் ஈரான் நாடுகளுடன் வணிகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் துறைமுக நகரமாக இருந்த பூம்புகார், பல நூற்றாண்டு காலமாக, கடலால் மெல்ல மூழ்கடிக்கப்பட்டிருந்ததும், தமிழகத்திலிருந்து உலகின் எத்தனை நாடுகளுக்கு அப்போதே வணிகம் பரவியிருந்ததும் என்பது குறித்த தகவல்களும் வெளியாகி ஆச்சரியத்தை அதிகரித்துள்ளது.

மூவேந்தா் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்க காலத்துக்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக பூம்புகாா் விளங்குகிறது.

காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் கண்டுணா்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கின. கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இந்தப் பணியை பேராசிரியா் கே. ராஜன் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநா் சிவானந்தம் உள்ளடக்கிய வல்லுநா் குழு நடத்தி வரும் நிலையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பகுதியில் இருந்து கூம்பி வடிவிலான மிகப்பெரிய ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இவை திராட்சை ரசம் (wine) மற்றும் பிற திரவப் பொருள்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவை பார்ப்பதற்கு நீளமான, குறுகிய அகல வடிவத்திலான கலன்கள் ஆகும்; இவை பாரசீக வளைகுடாவுடனான வர்த்தகத் தொடர்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலுக்கடியிலிருந்து மெருகூட்டப்பட்ட மட்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஈரானுடனான வணிகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மேற்காசிய நாடுகளுக்கு வணிகம் செய்வதற்கான மிக முக்கிய துறைமுகப் பகுதியாக பூம்புகார் விளங்கியதை இவை உறுதி செய்துள்ளன.

கூம்பு வடிவிலான பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மேற்காசிய நாடுகளான வர்த்தகம் எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை உணர்த்துவதால், ஆய்வாளர்கள் மிகப்பெரிய கண்டுபிடிப்பை அடைந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பே அங்கு யு வடிவிலான 5.5 கிலோ மீட்டர் தொலைவு கட்டமைப்பு போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பகுதியை பல ஆண்டு காலமாக சிறிது சிறிதாக கடல் உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பதும், அதற்கு சான்றாக பூம்புகார் அருகே வானகிரியில் உள்ள எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளதாகவும் 1991ஆம் ஆண்டு அது நிலப்பரப்பில் இருந்துள்ளது, தற்போது கடலுக்குள் 100 மீட்டர் தொலைவில் இருக்கிறது.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பூம்புகார் பல சுனாமிகளை சந்தித்திருக்கலாம் என்றும் தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை எல்லாம் மெல்ல கடல் அரிப்பால் உள்வாங்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

பூம்புகாரின் வரலாறும், சரித்திரமும், வெறும் கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் கட்டுமானங்கள் மற்றும் தொன்மையான பொருள்களோடு நின்றுவிடவில்லை. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை உள்ளிட்ட தமிழ் காப்பியங்களிலும், தாலமியின் 'புவியியல்' (Geography) போன்ற கிரேக்கோ-ரோமானிய ஆவணங்களிலும் இந்நகரம் குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்தே, இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். அப்போது காவிரிப்பட்டினம், காவிரிப் பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER